×

மகளிருக்கு ரூ.1000 அரசாங்கம் மதித்து கொடுக்கிறது: ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘காரைக்காலில் இருந்து, புதிய அமைச்சர் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி. இந்திய குடியுரிமை சட்டம் ஒன்றிய அரசின் சட்டம். அது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதல்ல, குடியுரிமை கொடுக்கும் திட்டம். நமது நாட்டில் மட்டும் கணக்கீடு இல்லாமல் குடியுரிமை உள்ளது. இனிமேல் சட்டத்துக்கு உட்படாமல் யாரும் தங்க முடியாது. சட்டத்தோடு எல்லோரும் குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காகத்தான் கொண்டு வரப்படுகிறது.

தவறாக நட்டை பிளவுபடுத்துவதுபோல பேசுவது தவறானது. மதத்தை வைத்து பிளவுபடுத்தவில்லை. இதனை அநாவசியமாக எதிர்க்காதீர்கள். இது பிரிக்கும் திட்டம் இல்லை, ஒன்றிணைக்கும் திட்டம்தான். மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசாங்கம் மதித்து கொடுக்கிறது. எந்த நோக்கத்தில் மகளிர் உதவித்தொகை குறித்து குஷ்பு சொன்னார் என்று தெரியவில்லை. தவறான மனநிலையில் சொல்லியிருக்க மாட்டார். ,’ என்றார்.

The post மகளிருக்கு ரூ.1000 அரசாங்கம் மதித்து கொடுக்கிறது: ஆளுநர் தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor Tamilisai ,Puducherry ,Karaikal ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்